வேலூரில் கடந்தாண்டு போக்குவரத்து விதிமீறியதாக 11,992 வழக்குகள் பதிவு


வேலூரில் கடந்தாண்டு போக்குவரத்து விதிமீறியதாக 11,992 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 14 Jan 2017 4:15 AM IST (Updated: 14 Jan 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் போக்குவரத்து விதி மீறியதாக கடந்தாண்டு 11 ஆயிரத்து 992 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

வேலூர்,

போக்குவரத்து விதிமீறல்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் வேலூர் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியம் அறிவுரையின் பேரில் வேலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹெல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிக வேகம், அதிகபாரம், போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுடன் ஏராளமான வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுகின்றனர்.

வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையிலான போலீசார் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 12 மாதங்களில் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 11 ஆயிரத்து 992 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.19¼ லட்சம் அபராதம்

இவற்றில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தாக 796 வழக்குகள், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தொடர்பாக 610 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 209 வழக்குகள், அதிகபாரம் ஏற்றி வந்ததாக 552 வழக்குகள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ரூ.19 லட்சத்து 44 ஆயிரத்து 400 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story