வெளி மாநிலத்தில் இருந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்
வெளிமாநிலத்தில் இருந்து 240 மதுபாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்த மூவேந்தர்
ராசிபுரம்,
வாகன தணிக்கை
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாமக்கல்லுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் மதுபான பாட்டில்கள் கார்களில் ராசிபுரம் வழியாக கடத்திக் கொண்டு வரப்படுவதாக நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு பிரிவு) செந்தில் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாகண்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் 3 குழுக்களாக பிரிந்து ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கட்டபுளியமரம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த 3 கார்களை ராசிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
3 பேர் கைதுஅந்த கார்களில் 375 மி.லி. அளவு கொண்ட 168 மதுபான பாட்டில்களும், 750 மி.லி. அளவில் 72 மதுபான பாட்டில்களும் என மொத்தம் 240 வெளிமாநில மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்ககளிடம் நடத்திய விசாரணையில் வருகின்ற 15–ந் தேதி நாமக்கல் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 240 மதுபான பாட்டில்கள் மற்றும் கார்களை மதுவிலக்குப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார்களில் வந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த திருவாரூர் மாவட்ட செயலாளர் அன்பரசன் (வயது 31) மற்றும் பிரபாகரன் (26), ஆனந்த் (29) உள்பட 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஆனந்த் நாமக்கல்லில் கார் பட்டறையில் தொழிலாளியாக இருந்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் (மதுவிலக்கு பிரிவு) பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.