ஜல்லிக்கட்டு நடத்த கோரி திருச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த கோரி திருச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியில் தி.மு.க. சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமானது. பீட்டா அமைப்பு மூலம் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்’’ என்றார்.

கோ‌ஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தொடர்பான கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story