மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி நாராயணசாமி தொடங்கி வைத்தார்


மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 14 Jan 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி தொடங்கியது. இதை முதல்– அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். தூர்வாரும் பணி புதுவை மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் தேங்கியுள்ளது. இதனால் மீன்பிடி படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் மீன

புதுச்சேரி

புதுவை மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி தொடங்கியது. இதை முதல்– அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணி

புதுவை மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் தேங்கியுள்ளது. இதனால் மீன்பிடி படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதன்காரணமாக மீன்பிடி தொழில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ரூ.14 கோடியே 89 லட்சம் செலவில் மீன்பிடி துறைமுகம் தூர்வாரப்பட உள்ளது. இந்த பணிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், அன்பழகன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த தூர்வாரும் பணிகள் குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–

3 மாதம் பணிகள் நடைபெறும்

மத்திய அரசின் நிறுவனம் மூலம் தற்போது புதுவை துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 500 கன மீட்டர் மணல் தூர்வாரப்படும். இந்த பணி 3 மாத காலம் நடைபெறும்.

இன்னும் 10 நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் சூழல் உருவாக்கப்படும். தற்போது அள்ளப்படும் மணல் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு காந்தி சிலையின் பின்புறம் மணல் பரப்பு உருவாக்கப்படும். இங்கு தூர்வாரும் பணி முடிந்ததும் வீராம்பட்டினம் பகுதியிலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story