கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). இவர் திருத்தணி நகராட்சியில் 13–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராகவும் திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த 9–10–2016 அன்று ஆறுமுகம் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்தணியை சேர்ந்த கிரண்(24), ஜாகீர் என்கின்ற ஜாகீர்உசேன்(24), ராஜேஷ் என்கின்ற ராஜேஷ்குமார்(23), பிரேம் என்ற பிரேம்குமார்(25), சின்னசாமி(43), வடிவேல்(35) என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில்ஙஇந்த நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட வடிவேலு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜேஷ் என்கிற ராஜேஷ்குமார், ஜாகீர் என்கிற ஜாகீர்உசேன் ஆகியோரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேற்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை நேற்று திருத்தணி போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.