ரூ.45 லட்சம் நிலமோசடி; பெண் கைது


ரூ.45 லட்சம் நிலமோசடி; பெண் கைது
x
தினத்தந்தி 14 Jan 2017 3:45 AM IST (Updated: 14 Jan 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

ரூ.45 லட்சம் நிலமோசடியில் ஈடுபட்டதாக பெண் கைது செய்யப்பட்டார்.

ரூ.45 லட்சம் கடன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் கண்ணன் (வயது 37). இவரிடம் கடந்த 2014–ம் ஆண்டு, பொன்னேரி தேரடி தெருவை சேர்ந்த பஜ்ராகனி (47) என்ற பெண், ரூ.45 லட்சம் கடன் வாங்கினார்.

பின்னர், அந்த கடன் தொகையை திருப்பித்தர தன்னால் இயலாது என்றும், அதற்கு பதிலாக, தச்சூரில் உள்ள தனக்கு சொந்தமான 4,016 சதுர அடி வீட்டு மனைகளை கண்ணன் பெயரில் பத்திரப்பதிவு செய்து தருவதாகவும் பஜ்ராகனி கூறினார்.

இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

வேறு நபருக்கு விற்பனை

ஆனால், பஜ்ராகனி அந்த நிலத்தை கண்ணனுக்கு பத்திரப்பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் அந்த வீட்டு மனைகளை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இதை அறிந்த கண்ணன், இது குறித்து பஜ்ராகனியிடம் கேட்டார். அவர் உரிய பதில் அளிக்காமல் தலைமறைவாகி விட்டார்.

கைது

இது குறித்து கண்ணன் திருவள்ளூர் நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாஷா, இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர்.

நிலமோசடியில் ஈடுபட்டதாக பஜ்ராகனியை கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story