தாம்பரத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தாம்பரத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:30 AM IST (Updated: 14 Jan 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரத்தில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர், தமிழர்களின் பண்பாட்டு வழக்கமான ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு, அவசர சட்டம் இயற்றி அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் தாம்பரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட பொருளாளர் பெருங்களத்தூர் சேகர், புகழேந்தி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story