மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி சஞ்சய் நிருபம் சொல்கிறார்
மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.
மும்பை
மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா – பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது போல மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் பேசியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:–
தனித்து போட்டிமும்பை தவிர மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சாத்தியம் உள்ளது. மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் சாத்தியமில்லை. இதை தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் விரும்புகின்றனர். எனவே அவர்கள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story