நன்மையை கணிக்கும் ‘நரி ஓட்டம்’ நரி கிடைக்காததால் முயலை வைத்து விழா நடத்தும் கிராமத்தினர்.


நன்மையை கணிக்கும் ‘நரி ஓட்டம்’ நரி கிடைக்காததால் முயலை வைத்து விழா நடத்தும் கிராமத்தினர்.
x
தினத்தந்தி 14 Jan 2017 8:15 AM IST (Updated: 14 Jan 2017 8:15 AM IST)
t-max-icont-min-icon

இதனையொட்டி நரியை பிடித்து வந்து கயிறு கட்டி கையில் பிடித்து கொள்வார்கள்.

தனையொட்டி நரியை பிடித்து வந்து கயிறு கட்டி கையில் பிடித்து கொள்வார்கள். கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள தருமர், திரவுபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கிராமத்தையொட்டி உள்ள பெரிய மைதானத்திற்கு அதனை கொண்டு செல்வர். அங்கு பூஜைகள் நடக்கும். அங்கு 2 மணி நேரத்திற்கு பாரத சொற்பொழிவு நடைபெறும். அதன் பின்னர் வாழைமரம் ஒன்றை கட்டி வைத்து வெட்டுவார்கள். அந்த வாழை மரத்தின் நார்களை தனியாக பிரித்து அங்கு வரும் மக்கள் அதனை அரைஞாண் கயிறாக கட்டிக் கொள்வார்களாம். அப்படி கட்டிக் கொண்டால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பின்னர் நரியை கையில் ஒருவர் பிடித்துக்கொள்ள விழாவிற்கு வந்த குழந்தைகள் அதை தொட்டு வணங்குவார்கள், நரி தங்கள் மீது பட்டால் தோஷம் நீங்கும், பில்லி, சூனியம் விலகும் என்பது நம்பிக்கை. இதன் பின்னர் நரியை ஓட விடுவார்களாம். அது ஓடும் திசையை வைத்து கிராமத்தின் நன்மையை கணிப்பது வழக்கம். மேற்கு திசையை நோக்கி ஓடினால் கிராமம், விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பின்னர் திரவுபதி அம்மனை கிராமத்தில் உள்ள வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று, கோவிலை அடைவார்கள்.

நரி கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படவே கிராமத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக முயலை பிடித்து வந்து விழாவில் குழந்தைகளை தொடச் செய்து பின்னர் முயலை ஓட விடுகின்றனர். ‘இந்த ஆண்டு நரி கிடைத்தால் நரி ஓடும், கிடைக்கவில்லை எனில் முயல் ஓட விடப்படும்’ என்கிறார்கள். இந்த ஆண்டு 16-ந்தேதி காணும் பொங்கல் விழாவில் இந்த வினோத நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Next Story