நட்புக் கொண்ட மீனும் மனிதரும்!


நட்புக் கொண்ட மீனும் மனிதரும்!
x
தினத்தந்தி 14 Jan 2017 9:08 AM IST (Updated: 14 Jan 2017 9:08 AM IST)
t-max-icont-min-icon

நட்புக் கொண்ட மீனும் மனிதரும்!

ப்பான் நாட்டில் ஒரு மனிதரும் மீனும் நீண்ட காலமாக ‘நண்பர்களாக’ இருந்து வருகிறார்கள்.

ஹிரோயுகி அரகாவா என்ற அந்த மனிதரும், யோரிகோ என்ற பெரிய மீனும் ஜப்பானின் டட்டியாமா வளைகுடா பகுதியில் அடிக்கடி சந்தித்து தங்கள் நட்பைப் பராமரித்து வருகின்றனர்.

25 ஆண்டுகளாக இந்தச் சந்திப்பு தொடர்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

ஹிரோயுகி ஒவ்வொரு முறையும் கடலுக்குள் சென்றதும் இரும்பு எந்திரம் ஒன்றின் மீது சுத்தியலால் தட்டுவாராம்.

அந்த சத்தத்தைக் கேட்டு துள்ளிக்கொண்டு வரும் மீன் யோரிகோவுடன் ஹிரோயுகி விளையாடி மகிழ்வாராம், தலையை வருடிக்கொடுப்பாராம். இந்த மனிதரும், மீனும் பரஸ்பரம் அன்புடன் முத்தமிட்டுக் கொள்வார்களாம்.

இத்தனை ஆண்டுகளாக நான் எப்போது கூப்பிட்டாலும் யோரிகோ வந்துவிடும் என நெகிழும் ஹிரோயுகி, அதைப் போன்ற ஓர் உற்ற தோழனை மனிதரில் கூட கண்டதில்லை என்கிறார்.

அதிசய நட்பு!

Next Story