தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் சிறப்பு தத்தெடுப்பு
தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு தத்தெடுப்பு
வேலூர்,
தமிழக அரசு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில் தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்பது தமிழ்நாட்டில் இருந்து வந்த பெண் சிசு கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
பல்வேறு சூழ்நிலைகளில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தைகள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் அனாதையாக முட்புதர், குப்பை தொட்டிகளில் தூக்கி வீசப்படுகின்றன. அந்த குழந்தைகளை மீட்டு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் தொட்டில்கள் வைக்கப்பட்டன.
பெண் குழந்தைகளை இந்த தொட்டிலில் விட்டு சென்றால் அந்த குழந்தைகள் தமிழக அரசு தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வளர்த்தெடுத்து அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதி செய்கிறது.
200 குழந்தைகள்2007–ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2007–ம் ஆண்டு முதல் இதுவரையில் 200 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, பின்னர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில் 134 குழந்தைகள் தகுதி வாய்ந்த பெற்றோரிடம் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு 8 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.
ரூ.40¾ லட்சம் நிதியுதவிஇந்த திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை, பால் பவுடர், மருந்து பொருட்கள், நாப்கின் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்திற்காக தமிழக அரசு பராமரிப்பு நிதியுதவியாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு தத்தெடுப்பு தொண்டு நிறுவனத்திற்கு 2011–12–ம் நிதியாண்டில் ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 900–ம், 2012–13–ம் நிதியாண்டில் ரூ.6 லட்சத்திற்கு 12 ஆயிரத்து 900–ம், 2013–14–ம் நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 450–ம், 2014–15–ம் நிதியாண்டில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 650–ம், 2015–16–ம் நிதியாண்டில் ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்து 450–ம் ஆக மொத்தம் 2011 முதல் 2016 வரை ரூ.40 லட்சத்து 96 ஆயிரத்து 350 நிதியுதவி வழங்கபட்டு இந்த திட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.