தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி 25–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்  இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி 25–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:00 AM IST (Updated: 15 Jan 2017 10:26 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை வழிகாட்டுதலின்படி தமிழக அரசுடன் இணைந்து இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் வங்கி கடனுதவி பெறும் முறைகள், திட்ட அறிக்கை தயார் செய்தல் உள்பட பல்வேறு சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியை முடிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் தொடங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் ஆகிய சேவைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. தற்போது இருசக்கர வாகன பழுது நீக்கம், நகை மதிப்பீட்டாளர், போட்டோ மற்றும் வீடியோ எடுத்தல், ஊறுகாய் அப்பளம் தயாரித்தல், சணல் பொருட்கள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியை பெற விருப்பம் உள்ளவர்கள் வருகிற 25–ந்தேதிக்குள் தங்கள் பெயர், முகவரி சேர விரும்பும் பயிற்சி ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் பெற தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story