ஓசூரில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ஓசூரில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 15 Jan 2017 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஓசூர்,

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஓசூரில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஆனந்தன், சீனிவாசன், செம்பருதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தமிழ் ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம், நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை, ஏரித்தெரு என்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.


Next Story