பொங்கல் பண்டிகையையொட்டி பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை
தளி,
சுற்றுலா பயணிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒரு சேர ஒரே குன்றில் அருள் பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இதனால் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும், திருமூர்த்தி அணைப்பகுதியை பார்வையிடவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கிறார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும், மும்மூர்த்திகளை தரிசனம் செய்வதற்காகவும் நேற்று திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
அதன்பின்னர் மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் சென்றனர். ஆனால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் குளிப்பதற்காக சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து வரிசையில் நின்று அருவியில் ஒரு சில இடங்களில் விழும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக பஞ்சலிங்க அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் அணைப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் மற்றும் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் திருமூர்த்திமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை தளி போலீசார் சரி செய்தனர்.

Next Story