வனத்திருப்பதி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

தென்திருப்பேரை,
குரும்பூர் அருகே உள்ள வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை முன்னிட்டு மூலவர் திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று மாலை 6 மணிக்கு சீனிவாச பெருமாள் குதிரை வாகனத்தில் பரிவேட்டை எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராஜகோபால், மகன்கள் சிவக்குமார், சரவணன் மற்றும் கோவில் மேலாளர் வசந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story