அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு


அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 Jan 2017 2:58 AM IST (Updated: 16 Jan 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் துரை(வயது 27). இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்மலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து சென்று துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Next Story