குமரி மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்


குமரி மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்வதிபுரம்,

ஆலோசனை கூட்டம்

குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர்மனோகரன், துணைச்செயலாளர் ஹெப்சிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் நகர செயலாளர் எம்.சந்திரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழாவை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளைகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை அழைத்து எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஜஸ்டின்செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தாணுபிள்ளை, ராஜரெத்தினம், வேல்முருகன், மத்தியாஸ், திலக்குமார், ரெஜிஸ்ராஜ், நகர செயலாளர்கள் குமார், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீஅய்யப்பன் நன்றி கூறினார்.

அறிக்கை

குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை நாகர்கோவில், குளச்சல், தோவாளை, பத்மநாபபுரம், அகஸ்தீஸ்வரம், மேல்புறம் ஒன்றியத்தில் நடைபெறும் கூட்டங்களில் கட்சியின் நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

18-ந் தேதி குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், தக்கலை, திருவட்டார் ஒன்றியங்களிலும், குழித்துறை நகரிலும் பொதுக்கூட்டம் நடக்கிறது. 19-ந் தேதி கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களிலும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story