பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து கணவன்-மனைவி உள்பட 4 பேர் சாவு
பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக பவானிசாகர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர்கள் அங்குள்ள பவானி ஆற்றை பரிசலில் சுற்றி பார்க்க சென்று உள்ளனர்.
பவானிசாகர்,
அப்போது பரிசல் கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் இறந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பி.எஸ்.என்.எல். அதிகாரி
பவானிசாகர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 63). இவருடைய உறவினர் ஜோசப் பவுல்ராஜ் (29). நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஆசாத் ஜெனிபர் (25).
இந்த நிலையில் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக தேவசகாயத்தின் வீட்டுக்கு ஜோசப் பவுல்ராஜ், அவருடைய மனைவி ஆசாத் ஜெனிபர், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆலன் பிரான்சிஸ் (22), சத்தியமங்கலத்தை சேர்ந்த சாமுவேல் விக்டர் என்பவரின் மகன்கள் ஜார்ஜ் அர்வின் (22), எட்வின் (12) ஆகியோர் வந்து இருந்தனர்.
பரிசல் கவிழ்ந்தது
இதைத்தொடர்ந்து அவர்கள் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள பவானி ஆற்றுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது அங்குள்ள பரிசலில் ஏறி பவானி ஆற்றை சுற்றி பார்க்க விரும்பினர். இதையடுத்து பரிசலில் ஜோசப் பவுல்ராஜ், ஆசாத் ஜெனிபர், ஆலன் பிரான்சிஸ், அர்வின், எட்வின் ஆகிய 5 பேர் ஏறி உள்ளனர். பரிசலை நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த டேவிட் பிரான்சிஸ் (45) என்பவர் ஓட்டினார்.
அவர்கள் அனைவரும் பரிசலில் உட்கார்ந்தவாறு பவானி ஆற்றின் அழகை கண்டு மகிழ்ந்தபடி பயணித்தனர். பவானி ஆற்றின் நடுவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பரிசல் கவிழ்ந்தது.
4 பேர் சாவு
இதில் பரிசலில் பயணம் செய்த 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். பரிசல் ஓட்டியான டேவிட் பிரான்சிஸ், எட்வின் ஆகியோருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால் மற்ற 4 பேருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் அந்த 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி 2 மணி நேரம் போராடி 4 பேரின் உடல்களையும் மீட்டனர். 4 பேரின் உடல்களை பார்த்ததும் தேவசகாயம் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் கதறி அழுதனர்.
சோகம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு வந்தபோது பவானி ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story