முதல்–மந்திரியுடன் சென்றபோது தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன், விஜயதாரணி எம்.எல்.ஏ. வாக்குவாதம்


முதல்–மந்திரியுடன் சென்றபோது தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன், விஜயதாரணி எம்.எல்.ஏ. வாக்குவாதம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:14 AM IST (Updated: 16 Jan 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ் மொழி பேசும் கன்னடர்களின் தின விழா பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் நேற்று நடந்தது.

பெங்களூரு

திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ் மொழி பேசும் கன்னடர்களின் தின விழா பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் நேற்று நடந்தது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, அவருடன் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விஜயதாரணி எம்.எல்.ஏ.வும் உடன் சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரிகள் விஜயதாரணி எம்.எல்.ஏ.வை தடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே லேசான வாக்குவாதம் உண்டானது. பின்னர் முதல்–மந்திரி சித்தராமையாவுடன் சென்று விஜயதாரணி எம்.எல்.ஏ. திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் முதல்–மந்திரி சித்தராமையா முன்னிலையில் தான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், தன்னை போலீஸ் அதிகாரிகள் தடுத்தது பற்றியும் அவர் ஆவேசமாக கூறினார். உடனே முதல்–மந்திரி சித்தராமையா விஜயதாரணியை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story