ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மாணவர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை
ராமேசுவரம்,
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே இளைஞர் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் கராத்தே பழனிச்சாமி, இளங்கோ, முருகானந்தம், சுரேஷ் மற்றும் வக்கீல் டோம்னிக்ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story