பாலக்கோடு பகுதியில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 32).
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 32). அண்மையில் பாலக்கோடு பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட ஜெகதீசை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று ஜெகதீசை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார். இதன்படி தொப்பூர் போலீசார், ஜெகதீசை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.