வேப்பனப்பள்ளி அருகே காதல் திருமணம் பெண் தற்கொலை


வேப்பனப்பள்ளி அருகே காதல் திருமணம் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2017 4:00 AM IST (Updated: 16 Jan 2017 10:19 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.கொத்தூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). கூலித்தொழிலாளி.

கிருஷ்ணகிரி,

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.கொத்தூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுவர்ணா (19) என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சுவர்ணா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினையால் சுவர்ணா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story