காணும் பொங்கலையொட்டி பனமலைப்பேட்டை தாளகிரீஸ்வரர் கோவில், செஞ்சி கோட்டையில் பொதுமக்கள் குவிந்தனர்
காணும் பொங்கலை யொட்டி தாளகிரீஸ்வரர் கோவில் மற்றும் செஞ்சி கோட்டையில் பொது மக்கள் குவிந்தனர்.
விழுப்புரம்,
காணும் பொங்கல்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா முடிந்து நேற்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிராமங்களில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலும் காணும் பொங்கல் விழா பெண்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். பொங்கல் தினத்தன்று பானையில் கட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கொத்துகளை எடுத்து சுமங்கலிகளின் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து தங்களது பாதம், முகத்தில் பூசிக்கொள்வார்கள். இப்படிப்பட்ட முக்கிய விழாவான காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த காணும் பொங்கலை விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்கு இடங்களான தியேட்டர், பூங்கா, கடற்கரை, மலைகோவில் போன்ற இடங்களுக்குச்சென்று மகிழ்ந்தனர்.
மலைக்கோவிலில் குவிந்த மக்கள்
அந்த வகையில் விழுப்புரம் அருகே பனமலைப்பேட்டையில் உள்ள பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த மலைக்கோவிலான தாளகிரீஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு அன்னியூர், அனந்தபுரம், சூரப்பட்டு, சங்கீதமங்கலம், கஞ்சனூர், கெடார், பாலப்பட்டு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மலை கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததோடு மலையின் அழகையும், இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் வயல்வெளிகளையும் கண்டு ரசித்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள், மலைக்கோவிலை சுற்றி விளையாடி மகிழ்ந்தனர். பொதுமக்களின் வருகையை கருத்தில் கொண்டு ஏராளமான தற்காலிக கடைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.
செஞ்சி கோட்டை
இதேபோல் செஞ்சி கோட்டைக்கு காணும் பொங்கலையொட்டி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்றனர். அங்கு அவர்கள் உற்சாகமாக செஞ்சி கோட்டையை சுற்றி பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். செஞ்சி கோட்டைக்குள் பொது மக்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செஞ்சி கோட்டை அலுவலர் சுரேஷ்வரதராஜன் செய்திருந்தார். மேலும் செஞ்சி பேரூராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறைகள் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. இது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மலர்விழி மேற்பார்வையில் அவசர கால சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story