விழுப்புரம் பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்


விழுப்புரம் பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

விழுப்புரம்,

விளையாட்டு போட்டிகள்

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று 6-ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர் களுக்கு கபடி, சாக்கு ஓட்டப்பந்தயம், குறைந்த வேக சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோ-கோ, கோலப்போட்டிகளும் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் கண்ணகி தெரு, திரவுதியம்மன் கோவில் தெரு, கோட்டமேடு, விஸ்வநாதன் லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகள் முடிவடைந்ததும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோல் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச்சங்கம் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் திருவாசக தெரு நண்பர்கள் இணைந்து 3-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளை நடத்தினார்கள். இதில் அறிவுத்திறன் போட்டிகள், கோலப்போட்டி, தவளை ஓட்டம், ஓவியம், கவிதை போட்டிகள், இசை நாற்காலி, உறியடித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், சிலம்பம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் கீழ்ப்பெரும்பாக்கம் திருவாசக தெரு, திருப்புகழ் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுயா டெய்சி எர்னஸ்ட் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச்சங்க கவுரவ தலைவர் கந்தன், மாவட்ட தலைவர் நாராயணன், செயலாளர் தனராஜ், துணைத்தலைவர்கள் சுரேஷ், சீனிவாசன், மல்லர்கம்பம் சங்க நிறுவனர் உலக.துரை, எழுத்தாளர்கள் எழில்.இளங்கோ, செங்குட்டுவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story