பெரியகுளம் அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


பெரியகுளம் அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:00 AM IST (Updated: 17 Jan 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை 9–வது வார்டை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் தட்டி கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பெரியகுளம்

பெரியகுளம் அருகே வடுகபட்டி குலாளர் தெருவில் உள்ள ஒரு வீட்டின் கதவை 9–வது வார்டை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் தட்டி கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது.

இதையறிந்த பொதுமக்கள் மதுபோதையில் ரகளை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வடுகபட்டி–வைகை அணை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியகுளம் போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மது போதையில் ரகளை செய்தவரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story