கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்


கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது.

கடலூர்,

பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி நம்ம கடலூர் அமைப்பு சார்பில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளை அறங்காவலர் கவுஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து கோலப்போட்டி நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நடைபாதையில் வித, விதமான வண்ண கோலங்களை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர். நடுவர்கள் சிறந்த 3 கோலங்களை தேர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

கபடி

அதன்பிறகு கபடி, வாலிபால், லக்கி கார்னர், பம்பரம், சாக்கு ஓட்டப்பந்தயம், மல்லர் கம்பம், பட்டம் விடுதல், சிலம்பாட்டம், பல்லாங்குழி, உறி அடித்தல், கும்மி, கரகம் உள்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.இந்த போட்டிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக மாணவ- மாணவிகள் அதிக அளவில் பங்கேற்றனர். மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

Next Story