திருப்பூரில் களைகட்டிய காணும் பொங்கல் விழா
திருப்பூரில் காணும் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
காணும் பொங்கல் விழா
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருவிழா கடந்த 14-ந்தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 14-ந்தேதி தை பொங்கல் விழாவும், நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் விழாவும் இதைத்தொடர்ந்து நேற்று காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. தைபொங்கல், மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடிய தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காணும் பொங்கலை சுற்றுலா தலங்கள், அருவிகள், பூங்காக்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொழுதை போக்கி கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் காணும் பொங்கலை நேற்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பூருக்குட்பட்ட பகுதியில் பொழுதுபோக்காக தியேட்டர்கள் மற்றும் ஒரு சில சிறிய அளவிலான பூங்காக்கள் மட்டுமே உள்ளன. இதனால் பலர் குடும்பத்துடன் உடுமலை, காங்கேயம், தாராபுரம், தளி, திருமூர்த்தி மலை, அமராவதி முதலை பண்ணை, அவினாசி லிங்கேசுவரர்கோவில், திருமுருகன்பூண்டி முருகன் கோவில், ஈரோடு கொடிவேரி அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடினார்கள். கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டும் வந்தனர்.
வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேற்று காலையிலேயே திருப்பூரின் புறநகர் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்று குடும்பத்தினருடன் பொழுதை போக்கினார்கள். இதனால் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. புறநகர் பகுதிகளுக்கு சென்று பொழுதுபோக்க முடியாதவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தியேட்டர்கள், பூங்காக்களில் நேற்று மாலையில் குவிந்தனர். பூங்காக்களுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த மற்றும் வாங்கி வந்திருந்த தின்பண்டங்கள், உணவு வகைகளை குடும்பமாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். இதனால் தியேட்டர்களிலும், பூங்காக்களிலும் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், இந்த கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறியவும் போலீசார் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காணும் பொங்கல் கொண்டாட்டம் காரணமாக மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களுக்கும் தை பொங்கலை தொடர்ந்து நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
விளையாட்டு போட்டிகள்
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூருக்குட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் அந்தந்த பகுதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருப்பூர் அண்ணாகாலனி, மாரியம்மன் கோவில் 3-வது வீதியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் குழந்தைகள், பெரியவர்களுக்கான எலுமிச்சம் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஓட்டம், கயிறு இழுத்தல், நொண்டியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடந்தது. சூசையாபுரம் மேற்கு பகுதியில் 48-வது வட்ட தி.மு.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் இளைஞர்களுக்கான இளவட்டக்கல் தூக்குதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டுக்கொண்டு இளவட்ட கல்லை தூக்கினார்கள்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதுபோல் திருப்பூர் சுண்டமேடு பகுதியில் உள்ள பால விநாயகர் கோவில் மைதானத்தில் தமிழ் மாநில காங்கிரசின் திருப்பூர் மாவட்ட கிளை மற்றும் பாலவிநாயகர் கோவில் கமிட்டி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் சாக்குப்பை ஓட்டம், இசை நாற்காலி, பாட்டிலில் நீர் நிரப்புதல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாலை 5 மணி முதல் கராத்தே மற்றும் சிறுவர், சிறுமிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது போல மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Next Story