ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி சேலத்தில் இரவில் இளைஞர்கள் சாலை மறியல்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி சேலத்தில் இரவில் இளைஞர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:45 AM IST (Updated: 17 Jan 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி சேலத்தில் நேற்று இரவு இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சாலை மறியல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று இரவு சேலம் 3 ரோடு பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி அலங்காநல்லூரில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


Next Story