மூணாறு அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற புலி பொதுமக்கள் அச்சம்
மூணாறு அருகே பசுமாட்டை, புலி அடித்துக்கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பசுமாடு இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்துள்ள டாப் டிவிசன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். தோட்ட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் பசுமாடு ஒன
மூணாறு,
மூணாறு அருகே பசுமாட்டை, புலி அடித்துக்கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பசுமாடுஇடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்துள்ள டாப் டிவிசன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். தோட்ட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் பசுமாடு ஒன்றை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை முருகேசன் தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது பசுமாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பசுமாட்டின் உடலில் நகக் கீறல்களும் இருந்தன. இதனால் பசுமாட்டை, புலி அடித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகம் கொண்ட முருகேசன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பசுமாட்டின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பசுமாட்டை புலி தான் அடித்து கொன்றது என்பது உறுதியானது.
பொதுமக்கள் அச்சம்இதையடுத்து கால்நடை டாக்டரின் உதவியுடன் பசுமாட்டின் உடலை பரிசோதனை செய்து புதைத்தனர். புலி நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘டாப் டிவிசன் பகுதியில் புலியின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதுவரை 5–க்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்து கொன்றுள்ளது. எனவே அதனை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனியாக யாரும் செல்ல வேண்டாம். புலி நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.