கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு
பாளையங்கோட்டையில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.
நெல்லை,
நகை பறிப்பு
பாளையங்கோட்டை சீனிவாசநகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி. அவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 62). இவர் நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் ராஜம்மாள் அருகில் சென்று முகவரி விசாரிப்பது போல் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து ராஜம்மாள் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story