கார்-டிராக்டர் மோதல்; டிரைவர் பலி 8 பேர் படுகாயம்
கோவில்பட்டி அருகே கார்- டிராக்டர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
கார் டிரைவர்
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது35). இவர் சொந்தமாக கார் வாங்கி, வாடகைக்கு ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (40). தச்சு தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு, விக்னேஷ் தனது காரில் தன்னுடைய குடும்பத்தினரையும், செல்வத்தின் குடும்பத்தினரையும் அழைத்து கொண்டு, விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலுக்கு சென்றார்.
பின்னர் மாலையில் அனைவரும் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, எதிரே டேங்கரில் தண்ணீரை ஏற்றிக்கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக காரும், டிராக்டரும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
டிரைவர் பலி
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. காரை ஓட்டி வந்த விக்னேஷ், அவருடைய மனைவி சுதா (32), அவர்களுடைய மகள் அபிநயா (6), மகன் அபிகுமார் (5), செல்வம், அவருடைய மனைவி செல்வி (35), அவர்களுடைய மகள் மற்றொரு அபிநயா (11), மகன் சரவணன் (7), செல்வியின் தாயார் சாந்தி (50) ஆகிய 9 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 8 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டிராக்டர் டிரைவர் கைது
விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரான கழுகுமலை வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ராமர் மகன் கிருஷ்ணகுமார் (37) நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story