முக்கூடல் சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தொடங்கியது


முக்கூடல் சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கூடல்,

சிங்கம்பாறை சின்னப்பர் ஆலயம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி நேற்று பங்கு இறைமக்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) மாதா சபை இளம்பெண்கள், இளைஞர்கள் சார்பிலும், நாளை முக்கூடல் ஆர்.சி. தொடக்கப்பள்ளி சார்பிலும் அன்பிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. 19-ந் தேதி சிங்கம்பாறை ஆர்.சி. தொடக்கப்பள்ளி சார்பிலும், 20-ந் தேதி தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி சார்பிலும், 21-ந் தேதி அன்பிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

சப்பர பவனி

தொடர்ந்து 22-ந் தேதி உணவு ஒன்றிப்பு பெருவிழாவும், 23-ந் தேதி நற்கருணை பெருவிழாவும், 24-ந் தேதி கூட்டு திருப்பலி சப்பர பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான 25-ந் தேதி காலை 8 மணிக்கு ஜூடு பால்ராஜ் மறை மாவட்ட ஆயர் தலைமையில், இறைவனை காணுதல் கருத்துரையும், 10.30 மணிக்கு லியோ ஜெரால்டு மறைவுரை கருத்துரையும் நடக்கிறது.

கொடியேற்று விழாவில் முக்கூடல், சடையப்புரம், அரிராம் நகர், மைலப்புரம் இலந்தைகுளம், தாளார்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சிங்கம்பாறை பங்கு பேரவை ஊர் நிர்வாகிகள், இறைமக்கள் மற்றும் பங்கு தந்தை ம.செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story