பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
நன்னிலம்,
சங்ககூட்டம்
நன்னிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் காளிமுத்து தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் மனோகரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானது இல்லை என்றும், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்த மாதம் (பிப்ரவரியில்) திருக்கொட்டாரத்தில் நடைபெற உள்ள விவசாய சங்க ஒன்றிய மாநாட்டில் அனைவரும் திரளான கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, நடராஜன், ரஜினிகாந்த், அக்பர்தீன், சேகர், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story