தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி,
காவலாளி வெட்டிக்கொலை
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள கண்டமங்கலம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சபாபதி(வயது42). இவர் திருவெறும்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருடைய மனைவி சாந்தி. இவர் கண்டமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சந்தோஷ், சுபாஷ் என 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சபாபதி நேற்று மாலை அருகில் உள்ள வரகூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வரகூருக்கும்- கண்டமங்கலத்திற்கு இடையே எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சபாபதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சபாபதி பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த சபாபதியின் உறவினர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் சபாபதியை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபாபதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட காரணமாக கண்டமங்கலம் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் கண்டமங்கலம் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சபாபதியின் உடல் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story