தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா


தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா
x
தினத்தந்தி 17 Jan 2017 4:00 AM IST (Updated: 17 Jan 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

மீன்சுருட்டி,

விழாவிற்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத் தலைவர் கோமகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், தமிழ்ச்சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் திருவள்ளுவன், பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் நால்வர் காட்டிய நன்னெறி என்ற தலைப்பில் பேராசிரியர் பால வடிவேல் பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை புலவர் கொளஞ்சிநாதன் செய்து இருந்தார். முடிவில், தமிழ்ச் சங்க பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.

Next Story