திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் தற்கொலை


திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2017 2:45 AM IST (Updated: 17 Jan 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு லக்கி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 53). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி ரமாபிரபா(48). இவர்களுக்கு சித்தாரா(14), சுவாதிகா(12) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சீனிவாசன், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு லக்கி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 53). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி ரமாபிரபா(48). இவர்களுக்கு சித்தாரா(14), சுவாதிகா(12) என 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சீனிவாசன், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனிவாசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story