திருவள்ளூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 25 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடவேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த நாளில் யாராவது திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுகிறார்களா? என கண்காணிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் திருவள்ளூர், திருத்தணி, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, வெள்ளவேடு, கடம்பத்தூர், திருப்பாச்சூர், மப்பேடு, பேரம்பாக்கம் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
25 பேர் கைதுஅப்போது மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 60 லிட்டர் ஆந்திர மாநில சாராயம் மற்றும் 394 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.