மதுராந்தகம் அருகே கார் மோதி புள்ளிமான் காயம்
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பிலாஞ்சி, அண்டவாக்கம், வேடந்தாங்கல், கரிக்கிலி, மலைப்பாளையம் போன்ற சுற்றுவட்டார பகுதிகள் மலைப்பகுதிகளாகும். இந்த மலையில் மான்கள் போன்ற சிறிய விலங்குகள் உள்ளன. நேற்று இரவு 7 மணி அளவில் மதுராந்தகம் ஏரிக
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பிலாஞ்சி, அண்டவாக்கம், வேடந்தாங்கல், கரிக்கிலி, மலைப்பாளையம் போன்ற சுற்றுவட்டார பகுதிகள் மலைப்பகுதிகளாகும். இந்த மலையில் மான்கள் போன்ற சிறிய விலங்குகள் உள்ளன. நேற்று இரவு 7 மணி அளவில் மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஜோடி புள்ளிமான்கள் ஓடிவந்தன.
அப்போது அந்த வழியாக வந்த காரில் பெண் மான் அடிபட்டது. உடனே ஆண் மான் ஏரியில் குதித்து தப்பிச் சென்றுவிட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் அந்த மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் அந்த மானை மீட்டு தங்கள் பாதுகாப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Story