ஆறுமுகநேரி அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் வழங்கினார்
ஆறுமுகநேரி அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை ஆதரவற்றோர் இல்லத்தில் தூத்துக்குடி மணி ஓட்டல் நிர்வாகம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அங்கு உள்ள மாணவ–மாணவிகள், மனவளர்ச்சி குன்றியோர், முதியோர் உள்ளிட்ட 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகர டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவரும், எம்.ஜி.ஆர். மன்ற ஆழ்வார்திருநகரி ஒன்றிய முன்னாள் செயலாளரும், தொழில் அதிபருமான ஆத்தூர் மணி மதிய உணவை வழங்கினார்.
பங்கேற்றோர்நிகழ்ச்சியில் புனித சூசை அறநிலைய இயக்குனர் ஜோசப் இசிதோர், துணை இயக்குனர் அம்புரோஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, முன்னாள் மீன்வளவாரிய தலைவர் அமிர்தகணேசன், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.