தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள்தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜ், உமாமகேசுவரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சின்னப்பன், பகுதி செயலாளர்கள் முருகன், எட்வின்பாண்டியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, முன்னாள் துணை மேயர் சேவியர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி, இனிப்புகளும் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்தூத்துக்குடி மாநகர கிழக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கிழக்கு பகுதி செயலாளர் எட்வின்பாண்டியன் தலைமை தாங்கினார். 250 பேருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
வக்கீல் பிரிவுதூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு சார்பில் கோர்ட்டு முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முள்ளக்காடுமுள்ளக்காடு பஸ் நிறுத்தத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி மாநகராட்சி தென்பகுதி அ.தி.மு.க. கழக செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். கழகம்தூத்துக்குடி எம்.ஜி.ஆர். கழகம் சார்பில், எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். கழக மாவட்ட செயலாளர் அழகிரிசாமி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ம.தி.மு.க.தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க. சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியதாழைஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ராஜ் நாராயணன், வக்கீல் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் சந்திரராஜ் மற்றும் நகர செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.