கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நிலுவை தொகை வழங்க வலியுறுத்தல்
பள்ளிபாளையம்,
தமிழக அரசு கரும்புக்கு அறிவித்த பரிந்துரைகளை கடந்த 3 ஆண்டுகாலமாக தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டையும், தனியார் சர்க்கரை ஆலைகள் நடைமுறைப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி அனைத்து தனியார் சர்க்கரை ஆலை முன்பும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்தது. இதையொட்டி பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை முன்பு நேற்று கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் நல்லாக்கவுண்டர் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் கொக்கராயன்பேட்டை, பட்லூர், மொளசி, சோழசிராமணி பகுதிகளில் உள்ள கரும்பு அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story