தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரூர்

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கும், உருவப்படத்திற்கும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அரூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா அரூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் மற்றும் அரசு ஆண்கள் பள்ளி அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஆர்.ஆர்.முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் வெள்ளை முருகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னரசு, அ.தி.மு.க. நகர செயலாளர் திருவேங்கடம், நிர்வாகி பழனிமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒன்றிய செயலாளர் கவுதமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெகநாதன், அவைத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சக்தி, தங்கமணி, பொன்னுமணி, செந்தில், சங்கர், முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மொரப்பூர்-கம்பைநல்லூர்

மொரப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மொரப்பூர் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் பார்த்தீபன் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சாட்சாதிபதி, முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் செல்வம், முனிராஜ், ராமச்சந்திரன், அண்ணாதுரை, நரசிம்மன், அருள்மணி, முருகன், இளவரசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பார்த்தீபன், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணன், தனசேகரன், நகர செயலாளர் தனபால், அவைத்தலைவர் வேலாயுதம், நிர்வாகிகள் ராமஜெயம், போதுமணி, ராஜேந்திரன், காவேரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று வகுரப்பம்பட்டி, பட்டகப்பட்டி, பள்ளிப்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காடையாம்பட்டி, கோணம்பட்டி, கடம்பரஅள்ளி, பன்னிகுலம் திப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Next Story