கிருஷ்ணகிரியில் தடையை மீறி எருது விடும் விழா
காரிமங்கலம், கிருஷ்ண கிரியில் தடையை மீறி எருது விடும் விழா நடைபெற்றது.
காரிமங்கலம்,
எருதாட்டம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ராமசாமி கோவில் வளாகத்தில் 12 கிராம மக்கள் பங்கேற்ற எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் காரிமங்கலம், மொட்டலூர், பையம்பட்டியானூர், எச்சனஅள்ளி, சின்ன மிட்டஅள்ளி, கெரகோடஅள்ளி, மேல்கொள்ளுப்பட்டி, கீழ்கொள்ளுப்பட்டி, காட்டூர், ஈச்சங்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்ட மாடுகளை ராமசாமி கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மாடுகளில் கயிறு கட்டி எருதாட்டம் நடைபெற்றது. இதில் மாடுகள் சீறி பாய்ந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி சென்றன. இதில் 12 கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கயிறை பிடித்தபடி மாடுகளை விரட்டி சென்றனர். இந்த எருதாட்டத்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த நிகழ்ச்சியையொட்டி காரிமங்கலம் ராமசாமி கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எருதாட்ட நிகழ்ச்சியையொட்டி காரிமங்கலத்தில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காரிமங்கலத்தில் தடையை மீறி எருதாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து கிராமங்களிலும் வளர்க்கப்படும் கோவில் காளைகள் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பூஜைகள் செய்து பின்னர் அந்த காளைகள் ஓடவிடப்படும்.
அதன்படி கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் தடையை மீறி எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த போட்டியில் கிருஷ்ணகிரி பழையபேட்டை, சோமார்பேட்டை, கங்கலேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.
2 ஆயிரம் பேர் பங்கேற்பு
இந்த காளைகளை பிடிப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் ஓடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story