புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை,
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள்
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டைபழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்-தே.மு.தி.க.
இதைப்போல மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் துரை.திவ்யநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைப்போல திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கறம்பக்குடி
கறம்பக்குடி நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கறம்பக்குடி மீன்கடை முக்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கறம்பக்குடி ஒன்றிய நகர தீபா பேரவை சார்பில் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவிலில், எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கூத்தையா தலைமை தாங்கினார். ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில், எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள்விழாவையொட்டி நகர கிளை சார்பில்சந்தைப்பேட்டை பஸ் நிலையத்தில் திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். இதில் நகர அவைத்தலைவர் முகமதுயூசப், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடி சந்தைப்பேட்டையில், அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் இன்சார் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அலிஅக்பர், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில், ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஒன்றிய செயலாளர் பழனியாண்டி கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து பொன்னமராவதி பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீரனூர்
கீரனூர் கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்திருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story