அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழுவினர் ஆய்வு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழு வினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர்,
டாக்டர்கள் குழு ஆய்வு
திருச்சியிலிருந்து இளவரசன், முத்துக்குமார் ஆகிய டாக்டர்கள், செவிலியர் சுஜாதா உள்ளிட்டோர் அடங்கிய டாக்டர்கள் குழு வினர் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையின் ஜெனரேட்டர் அறை, சமையலகம், அறுவை சிகிச்சை அரங்கம், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மருத்துவமனையில் உள்ள சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதனை நிவர்த்தி செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் டாக்டர்கள் குழுவினர் கூறினர். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் அரசு மருத்துவமனை கண் காணிப்பாளர் சசிகலா உள்பட மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
சிறந்த மருத்துவமனைக்கு விருது
இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் சிறந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் “காயகல்ப் தூய்மை மருத்துவமனை விருது” திட்டத்தின் கீழ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் திருச்சி டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து டெல்லிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த ஆய்வானது மருத்துவமனை குறைகளை நிவர்த்தி செய்ய வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். 19-ந்தேதிக்கு (நாளை) பிறகு டெல்லி, சென்னையிலிருந்து வரும் டாக்டர்கள் குழுவினர் தமிழக மருத்துவ மனைகளில் ஆய்வு நடத்துகின்றனர். இதில் தேர்வு செய்யப்படும் மாவட்ட மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் காசோலை விருது வழங்கப் படும். சிறந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.20 லட்சம் விருது வழங்கப்படும் என்று கூறினார்.

Next Story