கலெக்டர் வீட்டு முன்பு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
திருவோணம் அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தஞ்சை கலெக்டர் வீட்டு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
நீரேற்று நிலையத்துக்கு பூட்டு
தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சில்லத்தூர் ஊராட்சியில் உள்ளது சிவபுரம். இந்த கிராமத்திற்கு அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த ஊரில் உள்ள குடிநீர் தொட்டிக்கு நீர் வழங்குவதற்கான நீரேற்று நிலையம், கலையரங்கம், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், சத்துணவு கூடம் ஆகியவை அருகருகே உள்ளது. இவை அனைத்தும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நீரேற்று நிலையத்தை இழுத்து பூட்டிவிட்டார்.
தண்ணீர் இன்றி அவதி
இதனால் சிவபுரம் கிராமமக்கள் கடந்த 4 நாட்களாக தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிவபுரத்தை சேர்ந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் காலிக்குடங்களுடன் நேற்று லோடு ஆட்டோக்களில் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள கலெக்டர் வீட்டுமுன்பு திரண்டனர். பின்னர் அங்கேயே சாலையில் அமர்ந்து காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிட்டிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு கூறி கலெக்டர் முன்னிலையில் பேசி தீர்வு காணலாம் என அழைத்தனர். அதற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story