100-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு


100-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி தஞ்சையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர், தி.க.வினர், ம.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க.வினர் தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் தங்கப்பன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் சுற்றுலா மாளிகை, எம்.கே.மூப்பனார் சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு வங்கி தலைவர் பண்டரிநாதன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் துரை. வீரணன், சாமிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. இளமதி சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் சோம ரத்தினசுந்தரம், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி, முன்னாள் துணை மேயர் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர்கள் முருகேசன், பஞ்சாபகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.க.- ம.தி.மு.க.

இதே போல் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், ஒரத்தநாடு குணசேகரன், நகர செயலாளர் முருகேசன், தி.க. பேச்சாளர் பெரியார்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story