சாலை விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்துகளை நிச்சயம் தடுக்க முடியும்
சாலை விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்துகளை நிச்சயம் தடுக்க முடியும் என்று திருவாரூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர்,
சாலை பாதுகாப்பு வார விழா
திருவாரூர் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் பஸ்களில் பின்புறம் எச்சரிக்கை ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
சாலை விதிமுறைகள்
விபத்துகளால் ஏற்படும் விலை மதிப்பில்லாத உயிரிழப்பை தடுத்திட சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை விதிமுறைகளை கடைப்பிடித்தால் நிச்சயம் விபத்துகளை தடுக்க முடியும். வாகனங்களை ஓட்டி செல்லும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போக்குவரத்து சட்டத்தின்படி சரியான வயதில் மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். மோட்டார்சைக்கிள் ஓட்டும்போது தலைகவசம் அணிந்திருக்க வேண்டும். உங்கள் பாதுகாப்பே உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழிப்புணர்வு கண்காட்சி அரங்கு
முன்னதாக அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பஸ்சில் அமைக்கப்பட்ட நடமாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நடமாடும் அரங்கம் வருகிற 23-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள், பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்படும். பொதுமக்கள் இக்கண்காட்சி அரங்கை பார்வையிட்டு விழிப்புணர்வு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வெங்கிடுசாமி, அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட மேலாளர் சிதம்பரகுமார், கிளை மேலாளர் மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story