எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது
திருவாரூர்,
நூற்றாண்டு பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. முன்னதாக பனகல் சாலை நகர கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு புதுத்தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அடைந்தனர். அங்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமையில், கட்சியினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயராகவன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர் முத்துமாணிக்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசல் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நூற்றாண்டு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடவாசல் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் சுவாமிநாதன் தலைமையில், எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். இதை தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகர அவைத்தலைவர் சங்கர், நகர துணைச்செயலாளர் சிங்காரவேலு, மாவட்ட பிரதிநிதிகள் சாகுல்அமீது, நகர நிர்வாகிகள் முத்துசெல்வம், முருகானந்தம், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பெரும்பண்ணையூரில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கட்சியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதேபோல சீதக்கமங்கலம் ஊராட்சியில் மேலராமன்சேத்தியில் கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில், அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
குடவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எரவாஞ்சேரியில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டி.ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் ஏசுராஜன், கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள், ராமகிருஷ்ணன், இமயவரம்பன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடுகக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் அறிவழகன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்தார்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவுக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர்.கே.பி.நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் இரணியன், ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் அன்பழகன், அவைத்தலைவர் கோவிந்தராஜ், நகர பொருளாளர் நடராஜன், துணை செயலாளர்கள் மைநூர்தீன், பானுமதிராமசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் ஜெயராமன், தென்னை வளர்ப்பு குழு இயக்குனர் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story