எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா படத்துக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார்


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா படத்துக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார்
x
தினத்தந்தி 17 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-18T02:06:07+05:30)

திருவண்ணாமலை பகுதியில் நடந்த எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாவில் அவரது சிலை மற்றும் படத்துக்கு முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார்.

திருவண்ணாமலை,

எம்.ஜி.ஆர்.பிறந்தநாள்


எம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.சார்பில் விழா நடந்தது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து அவர் அடிஅண்ணாமலை, நூக்காம்பாடி, வேடந்தவாடி, கலசபாக்கம், கோவில்மாதிமங்கலம், பாய்ச்சல் உள்பட பல இடங்களில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்தார்.

100 கிலோ கேக்


நூக்காபாடியில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து 100 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அரங்கநாதன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஏ.கே.குமாரசாமி, பாஷியம், ஜெயபிரகாஷ், முன்னாள் நகர மன்ற தலைவர் என்.பாலசந்தர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் ஏ.கோவிந்தராஜ், ஜானகிராமன், லதாதஷ்ணாமூர்த்தி, துணை தலைவர் அரங்கநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பர்குணகுமார், முன்னாள் கவுன்சிலர் சம்பத், மாவட்ட பேரவை இணை செயலாளர் முரளிமோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், பழனிராஜ், ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ்,வேடியப்பன்,கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்மாத்தூர் ஊராட்சி செயலாளர் கலியபெருமாள், இளைஞர் பாசறை இணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story